NATIONAL

மந்திரி பெசார்: கோவிட்-19 தொற்று நோய் எதிர்ப்பு போராட்டம் இன்னும் முடியவில்லை !!!

12 மே 2020, 3:19 PM
மந்திரி பெசார்: கோவிட்-19 தொற்று நோய் எதிர்ப்பு போராட்டம் இன்னும் முடியவில்லை !!!

ஷா ஆலம், மே 12:

பல பகுதிகள் பச்சை மண்டலங்களாக அறிவிக்கப்பட்ட போதிலும், கோவிட் -19 தொற்று நோயை எதிர்த்து போராடுமாறு ஒட்டுமொத்த சமூகத்தையும் சிலாங்கூர் மாநில மந்திரி பெசார் கேட்டுக்கொள்கிறார். "நாடு முழுவதும் 94.4 % பிரிவுகள், மண்டலங்கள், துணை மண்டலங்கள் மற்றும் வளாகங்கள் இப்போது பச்சை  மண்டலங்களாக வகைப்படுத்தப் பட்டிருந்தாலும், கோவிட் -19 ஐ எதிர்த்துப் போராடுவதற்கான எங்கள் முயற்சிகள் இன்னும் தொடரப்பட வேண்டும்" என்று டத்தோஸ்ரீ அமிருடின் ஷார  இன்று இரவு ட்விட்டரில் தெரிவித்தார்.

சிலாங்கூரில் இன்று மூன்று புதிய கோவிட் -19 சம்பவங்கள் பதிவாகியுள்ளன, மொத்தம் 1,610சம்பவங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளது.  கோம்பக் மாவட்டம் இன்று மஞ்சள் மண்டலமாக மேம்பட்டது, இதனால் சிலாங்கூரில் அனைத்து மண்டலங்களும்  சிவப்பு மண்டலத்திலிருந்து வெளியே வந்து விட்டது. நாட்டில் இன்று 16 கோவிட் -19 வழக்குகள் பதிவாகியுள்ளன, இது நடமாடும்  கட்டுப்பாட்டு உத்தரவு அமல்படுத்தப்பட்டதிலிருந்து மிகக் குறைவானது. இவற்றில், ஒன்பது வழக்குகள் வெளிநாட்டினருடன் தொடர்புடையவை.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.