NATIONAL

ஓத்மான் சாலை சந்தைப் பகுதியில் குடியிருப்பாளர்கள் அனைவரும் பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவர்

11 மே 2020, 7:39 AM
ஓத்மான் சாலை சந்தைப் பகுதியில் குடியிருப்பாளர்கள் அனைவரும் பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவர்

ஷா ஆலம், மே 11:

பெட்டாலிங் ஜெயாவில் உள்ள ஓத்மான் சாலை சந்தையில் நிபந்தனைக்குட்பட்ட நடமாடும் கட்டுப்பாட்டு ஆணையின் (பிகேபிடி) கீழ்  அனைத்து குடியிருப்பாளர்கள்  மற்றும் வணிகர்கள் அனைவரும் கோவிட் -19 பரிசோதனைக்கு  உட்படுத்தப்படுவர் என மூத்த அமைச்சர் (பாதுகாப்பு) டத்தோ ஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாகோப் கூறினார்.கோவிட்-19 வைரஸ் நோயை தடுக்கும் முயற்சியில் இப்பகுதியைச் சுற்றியுள்ள மூன்று மண்டலங்களில் 2,900 பேரை உள்ளடக்கியதாகக் கூறினார்.

"குடியிருப்பாளர்களை அமைதி காக்கும் வேளையில்,  சுகாதார அமைச்சின் அதிகாரிகளுடன் ஒத்துழைக்கவும் மற்றும் மற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் அறிவுறுத்தல்களைப் பின்பற்ற வேண்டுமாறு நான் கேட்டுக்கொள்கிறேன். அனைத்து குடியிருப்பாளர்களுக்கும் பரிசோதனை நடத்தப்படும் ," என்று அவர் இன்று புத்ராஜெயாவில் ஒரு ஊடக மாநாட்டில் கூறினார்.

26 நேர்மறை கோவிட் -19 சம்பவங்கள் தொடர்ந்து, மே 23 வரை பெட்டாலிங் ஜெயாவின் முக்கிய பொதுச் சந்தையான ஓத்மான் சாலை சந்தை  பிகேபிடி நடவடிக்கையினால் அன்றாடவாழ்க்கை  பாதிக்கப்பட்டது. இதனிடையே, புதன்கிழமை தொடங்கி நிபந்தனைக்குட்பட்ட நடமாடும்  கட்டுப்பாட்டு ஆணையின் (பிகேபிபி)  இரண்டாம் கட்டத்தின் கீழ் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை ஷாப்பிங் மால்கள் போன்ற பொது இடங்களுக்கு அழைத்து வருவதை தடை செய்வதற்கான சாத்தியத்தை அரசாங்கம் நிராகரிக்கவில்லை என்று இஸ்மாயில் சப்ரி கூறினார்.

தற்போது தொற்று நோய்களைத் தடுக்கும் மற்றும் கட்டுப்படுத்தும் சட்டம் 1988 (சட்டம் 342) இன் கீழ், பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை மாலுக்கு அழைத்து வந்தால் அரசாங்கத்திற்கு எந்தத் தடையும் இருக்காது, ஆனாலும், இது தொடர்ந்தால் அரசாங்கம்  தடைகளை விதிப்பது குறித்து ஆய்வு செய்வார் என்றார்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.