ஷா ஆலம், மே 19:
அன்னையர்கள் அனைவருக்கும் சிலாங்கூர் மாநில மந்திரி பெசார் தனது அன்னையர் தின வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டார். டத்தோ ஸ்ரீ அமிருடின் ஷாரி பிள்ளைகள் தங்களது அன்னையர்களின் அர்ப்பணிப்பை மதிக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார். அன்னையர்கள் நீண்ட ஆயுளை பெற வேண்டும் என எல்லோரும் இறைவனை வேண்டிக் கொள்ள வேண்டும்.
" அன்னையர் என்ற தகுதியுடைய அனைத்து தேவதைகளுக்கும் எனது அன்னையர் தின வாழ்த்துக்கள். பிள்ளைகளை பெற்று, வளர்த்து, வாழ்க்கையில் உன்னத மனிதனாக ஆக்கிய அன்னையர்களின் அர்ப்பணிப்புக்கு விலை மதிப்புக் கிடையாது. அவர்கள் பூமியில் இருக்கும் வரை மரியாதை செலுத்துங்கள். மறைந்த அன்னையர்களை நினைத்து பிரார்த்தனை செய்யுங்கள்," என்று தமது அன்னையர் தின வாழ்த்துச் செய்தியில் மந்திரி பெசார் டிவிட்டரில் பதிவு செய்தார்.
[caption id="attachment_408703" align="alignright" width="411"]
Dato' Menteri Besar menzahirkan ucapan Selamat Hari Ibu. Foto Facebook Amirudin Shari[/caption]


