RENCANA PILIHAN

ஓத்மான் சாலை சந்தையில் மே 23 வரை பிகேபிடி நடவடிக்கை !!!

10 மே 2020, 1:55 AM
ஓத்மான் சாலை சந்தையில் மே 23 வரை பிகேபிடி நடவடிக்கை !!!

ஷா ஆலம், மே 10:

பெட்டாலிங் ஜெயா, ஒத்மான் சாலையில் அமைந்துள்ள பொதுச் சந்தை பகுதியில் நிபந்தனைக்குட்பட்ட  கட்டுப்பாட்டு ஆணையை (பிகேபிடி) அமல்படுத்தமாறு சுகாதார அமைச்சரின் ஆலோசனையின் பேரில் நடைமுறைக்கு கொண்டு வரப்படுகிறது என மூத்த அமைச்சர் (பாதுகாப்பு) தெரிவித்தார். இந்த உத்தரவு இன்று முதல் மே 23 வரை நடைமுறைக்கு வந்ததாக டத்தோ ஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாகோப் கூறினார், இப்பகுதியில் சுமார் 2,900 குடியிருப்பு மற்றும் வணிக வளாகங்கள் உள்ளன.

" பிகேபிடியின் இந்த நடவடிக்கை கோவிட்-19 தொற்று நோய் 26 புதிய சம்பவங்கள் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் இது  ஆபத்தில் ஆழ்த்தக்கூடும் என்றார். கோவிட் -19 தொற்று பரவாமல் தடுப்பதே பிகேபிடியின் நோக்கம். இந்த நடவடிக்கை இந்த காலகட்டத்தில் ஒவ்வொன்றாக சம்பவங்களை கண்டறியும் நடவடிக்கைகளை மேற்கொள்ள உதவும், "என்று அவர் இன்று ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.

இதனிடையே, இஸ்மாயில் சப்ரி இந்த உத்தரவை அமல்படுத்தியதன் மூலம் எந்தவொரு குடியிருப்பாளர்களும் பிகேபிடி பகுதியை விட்டு வெளியேற அனுமதிக்கப்பட மாட்டார்கள் . குடியிருப்பாளர்கள் அல்லாதவர்கள் அந்த பகுதிக்கு அனுமதிக்கப்படப் படமாட்டார்கள். அனைத்து வணிக நடவடிக்கைகளும் இப்பகுதியில் நிறுத்தப்பட்டுள்ளன. பிகேபிடி பகுதியில் மருத்துவ தற்காலிக மையம்  திறக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் அனைத்து நுழைவு மற்றும் வெளியேறும் இடங்களும் மூடப்பட்டுள்ளன என்று அவர் கூறினார்.

இந்த உத்தரவை அமல்படுத்துவதை உறுதி செய்வதற்காக,  மலேசிய காவல்துறை (பிடிஆர்எம்), மலேசிய ஆயுதப்படைகள் (ஏடிஎம்), மலேசிய சிவில் பாதுகாப்பு படை (ஏபிஎம்), பெட்டாலிங் ஜெயா மாநகராட்சி மன்றம் (எம்பிபிஜே), சமூக நலத் துறை (ஜேகேஎம்) மற்றும் மலேசிய தன்னார்வத் துறை (ரெலா) ) முழு பகுதியையும் கட்டுப்படுத்தும்.

உதவிகள் தேவைப்படும் அல்லது ஏதேனும் கேள்விகள் இருந்தால்  குடியிருப்பாளர்கள் 016-980 9389 என்ற பெட்டாலிங் ஜெயா பிகேபி அறை அல்லது 03-7966 2222 என்ற எண்ணில் பெட்டாலிங் ஜெயா மாவட்ட காவல் தலைமையகத்தை தொடர்பு கொள்ளலாம்" என்று இஸ்மாயில் சப்ரி  கூறினார்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.