ஷா ஆலம், மே 5:
நாளை தொடங்கி ஸ்மார்ட் சிலாங்கூர் பேருந்துகள் மற்றும் பிஜே சிட்டி பேருந்துகள் மீண்டும் பணியில் ஈடுபடவிருக்கிறது. காலை 6 மணி தொடங்கி இரவு 10 மணி வரையில் போக்குவரத்து சேவையை வழங்கும் என சிலாங்கூர் ஊராட்சி மன்ற ஆட்சிக்குழு உறுப்பினர் எங் ஸீ ஹான் கூறினார். 103 ஸ்மார்ட் சிலாங்கூர் பேருந்துகள் 36 வழிப்பாதைகளில் சேவைகளில் ஈடுபட உள்ளது என்று அவர் மேலும் தெரிவித்தார். 16 பிஜே சிட்டி பேருந்துகள் தனது ஆறு வழிப்பாதைகளில் பயணிக்க இருக்கிறது என்றார்.
" எல்லாப் பயணிகள் மற்றும் பேருந்து ஓட்டுநர்கள் நிர்ணயிக்கப்பட்ட வழிமுறைகளை பின்பற்ற வேண்டும். சமூக இடைவெளி, முகமூடி அணிவது மற்றும் பொது போக்குவரத்து வாகனங்களை பயன்படுத்திய பிறகு கைகளை கழுவுவது ஆகியவற்றை கடைபிடிக்க வேண்டும்," என்று சிலாங்கூர் இன்றுக்கு தெரிவித்தார்.
[caption id="attachment_407327" align="alignright" width="375"]
Bas Smart Selangor menjalani nyahkuman. Foto: Facebook Ng Sze Han[/caption]


