ஷா ஆலம், மே 4:
பரிசோதிக்கப்பட்ட கோவிட் -19 நோயாளிகளில் குறைந்த எண்ணிக்கையில் மட்டுமே அறிகுறிகள் இல்லை என்பதை மலேசிய சுகாதார அமைச்சு ஒப்புக் கொண்டுள்ளது. பரிசோதனை செய்யப்பட்ட 5,164 அறிகுறிகள் இல்லாத நோயாளிகளில், ஐந்து அல்லது 0.1 சதவீதம் பேருக்கு மட்டுமே நேர்மறையான பாதிப்பு இருப்பதாக தலைமை சுகாதார இயக்குனர் தெரிவித்தார்.
"சிலாங்கூரில், 5,433 நபர்கள் பரிசோதனை செய்யப் பட்டனர் , எட்டு பேருக்கு மட்டுமே அறிகுறிகள் இல்லை. எண்ணிக்கை சிறியதாக இருக்கும் சில சந்தர்ப்பங்கள் உள்ளன, ஆனால் ஏதும் அறிகுறிகள் இருந்தால் அவர்களை மருத்துவமனைக்குச் செல்லும்படி கேட்கிறார்கள்" என்று டத்தோ டாக்டர் நூர் ஹிஷாம் புத்ராஜெயாவில் இன்று செய்தியாளர்களிடம் கூறினார்.
அறிகுறிகள் இல்லாத நபர்கள் தொற்றுநோயை மற்றவர்களுக்கும் பரப்பலாம், ஆனால் ஆபத்து குறைவாக உள்ளது என்று டாக்டர் நூர் ஹிஷாம் கூறினார். "வைரஸின் அளவு இன்னும் குறைவாக இருந்தாலும், தனிநபருக்கு சுகாதார பரிசோதனை செய்ய அறிவுறுத்தப்படுகிறது," என்று அவர் கூறினார்.


