NATIONAL

கடமையில் ஈடுபட்டுள்ள போது உயிரிழந்த காவல்துறை அதிகாரிக்கு மந்திரி பெசார் இரங்கல் தெரிவித்தார் !!!

3 மே 2020, 3:24 AM
கடமையில் ஈடுபட்டுள்ள போது உயிரிழந்த காவல்துறை அதிகாரிக்கு மந்திரி பெசார் இரங்கல் தெரிவித்தார் !!!

ஷா ஆலம், மே 3:

இன்று காலை சாலை தடுப்பு (எஸ்ஜேஆர்) ஒப் கோவிட் -19 பொறுப்பில் இருந்தபோது இறந்த காவலரான கார்போரல் சஃப்வான் முஹம்மது இஸ்மாயில் குடும்பத்திற்கு தனது இரங்கலை மந்திரி பெசார் டத்தோ ஸ்ரீ  அமிருடின் ஷாரி தெரிவித்தார்.

" எஸ்ஜேஆரில் கடமையில் இருந்தபோது கொல்லப்பட்ட மறைந்த கார்போரல் சஃப்வானின் குடும்பத்திற்கு எனது இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். இறைவனின் ஆசீர்வதிக்கப்பட்டு சொர்கத்தில் இருக்கட்டும், " என்று  அமிருதீன் ஷரி இன்று ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

இன்று அதிகாலை, கஜாங் மாவட்ட காவல் தலைமையகத்தின் குற்றப் புலனாய்வுத் துறையின் வழக்குரைஞர் மற்றும் சட்டப் பிரிவு (டி 5) உறுப்பினர் சஃப்வான் (31) கஜாங் பிளாசா தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் குடிபோதையில் வாகனம் ஓட்டி மோதியதில் இறந்தார். அதிகாலை 2.11 மணியளவில் கஜாங்கிலிருந்து டோல் பிளாசாவுக்குச் சென்ற டொயோட்டா ஹிலக்ஸ் டிரைவர் கட்டுப்பாட்டை இழந்து பாதிக்கப்பட்டவர் மற்றும் போலீஸ் வாகனங்களை சாலையோரத்தில் மோதியது. இதனால், சஃப்வானின் தலை மற்றும் உடலில் பலத்த காயம் ஏற்பட்டது. அன்னாரின் சவஅடக்கம் பெராக், உலு கிண்டாவில் நடைபெறும் என காவல்துறை தெரிவித்தது.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.