கோலா லம்பூர், ஏப்ரல் 30:
நடமாடும் கட்டுப்பாட்டு ஆணையின் (பிகேபி) போது உணவு மற்றும் பொட்டலங்களை அனுப்பும் மோட்டார் ஓட்டுனர்கள் தங்கள் பொட்டலங்களை அனுப்புவதற்காக வேகமாக செல்ல வேண்டாம் என்றும் உயிருக்கு ஆபத்து ஏற்படாமல் இருக்க சாலை பாதுகாப்பு விதிகளை பின்பற்ற வேண்டும் என்றும் காவல்துறை அறிவுறுத்தியுள்ளது. கோலாலம்பூர் போக்குவரத்து அமலாக்க மற்றும் புலனாய்வுத் துறைத் தலைவர் சுல்கிப்ளி யஹ்யா கூறுகையில் , சேவையைச் செயல்படுத்தும்போது ஓட்டுனர்களின் மனதில் பாதுகாப்புக்கு முன்னுரிமை இருக்க வேண்டும் என்று குறிப்பிட்டார்.
பிகேபி காலகட்டத்தில் வெற்று சாலைகளில் வேகத்தை அதிகரிக்க சிலர் சாதகமாக பயன்படுத்தக்கூடும் என்பதால், அனைத்து சாலை பயனர்களும் விழிப்புடன் இருக்க வேண்டும் என்று சுல்கிப்ளி கூறினார்.


