ஷா ஆலம், ஏப்ரல் 30:
கோலா குபு பாரு சட்ட மன்ற தொகுதியின் 550 குடும்பங்களுக்கு 'ஜோம் சொப்பிங்' திட்டத்தின் வழி நோன்பு பெருநாள் பற்றுச்சீட்டுகளை இன்று முதல் வழங்கப்படும் என்று கோலா குபு பாரு சட்ட மன்ற உறுப்பினர் லீ கீ ஹியோங் கூறினார். நடமாடும் கட்டுப்பாடு ஆணை (பிகேபி) காலகட்டத்தில் கூட்ட நெரிசலை கட்டுப்படுத்தும் நோக்கில் கட்டம் கட்டமாக இந்த திட்டத்தில் பங்கேற்பாளர்கள் தொடர்பு கொள்ளப் படுவார்கள் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
" சட்ட மன்ற மக்கள் சேவை அலுவலகம் ரமலான் மாதத்தை முன்னிட்டு 550 ஏழை குடுபங்களுக்கு 'ஜோம் சொப்பிங் ' பற்றுச்சீட்டுகள் இன்று தொடங்கி வழங்கும். பயன் அடையும் மக்களை தொடர்பு கொண்டு வெவ்வேறு நேரங்களில் வந்து பெற்றுக் கொள்ளும் படி வேண்டி கேட்டுக் கொள்கின்றேன். பற்றுச்சீட்டு வழங்கும் இடத்தில் சமூக இடைவெளி மற்றும் கிருமி நாசினி கொண்டு கைகளை கழுவ வேண்டும். அது மட்டுமல்லாமல், உடல் வெப்பநிலையும் சோதனை செய்யப்படும்," என்று தனது அகப்பக்கத்தில் லீ கீ ஹியோங் பதிவு செய்துள்ளார்.


