ஷா ஆலம், ஏப்.30-
நாட்டில் மேலும் மூன்று வட்டாரங்களை பச்சை மண்டலமாக மலேசிய சுகாதார அமைச்சு இன்று அறிவித்தது.
இந்நிலையில், சிலாங்கூரின் பெட்டாலிங் ஜெயா மற்றும் உலு லங்காட் ஆகிய இரு வட்டாங்கள் உட்பட மொத்தம் 12 வட்டாரங்கள் தொடர்ந்து சிவப்பு மண்டலமாக நீடிக்கின்றன என்று அமைச்சின் அறிக்கை கூறியது. அவற்றை தொடர்ந்து தித்திவங்சா, லெம்பா பந்தாய், ஜோகூர் பாரு மற்றும் குளுவாங் ஆகிய வட்டாரங்களும் சிவப்பு மண்டலத்தில் நீடிப்பதாக அது தெரிவித்தது.
மேலும் குவாந்தான், சிரம்பான், கூச்சிங், கோத்தா சமராஹான் மற்றும் மத்திய மலாக்கா ஆகிய பகுதிகளும் இப்பட்டியலில் இடம்பெற்றுள்ளன.
இதனிடையே, நேற்று வரையில் ஓர் இலக்க எண்ணிக்கையிலான நோயாளிகளைக் கொண்டுள்ள பெர்லீஸ், கெடா மற்றும் கிளந்தான் ஆகிய மூன்று மாநிலங்களும் பச்சை மண்டலமாகப் பிரகடணப்படுத்தப்பட்டுள்ளன.


