ஷா ஆலம், ஏப்.30-
செமெந்தா சட்டமன்ற தொகுதியில் அடிக்கடி இடியுடன் கூடிய மழை பெய்வதால் இப்பகுதியில் உள்ள கால்வாய்களின் நீரோட்டம் தடைப்படாமல் இருக்கு அவற்றின் அடைப்புகள் அகற்றும் பணி விரைந்து மேற்கொள்ளப்படும் என்று அதன் சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் டாரோயா அல்வி கூறினார். அட்டவணைப்படி குப்பைகள் சுத்தம் செய்யப்படாத காரணமாக ஏற்பட்டுள்ள கால்வாய் அடைப்புகளை வடிகால் மற்றும் நீர் பாசன துறை (ஜேபிஎஸ்) மற்றும் கிள்ளான் பொது பணி துறை (ஜேகேஆர்) அடையாளம் கண்டுள்ளன என்றர் அவர்.
துப்புரவு பணிகள் குறித்து விளக்கமள்ளிப்பு அனுமதியும் விரைவில் மேற்கொள்ளப்படும் என்று முகநூலில் வாயிலாக அவர் தெரிவித்தார். நேற்று பெய்த கனத்த மழை காரணமாக கம்போங் செமெந்தா, கம்போங் பெரெபிட், ஜாலான் பெதெங் புக்கிட் காப்பார் மற்றும் கம்போங் புக்கிட் கெராயோங் ஆகிய பகுதிகளில் உள்ள வீடுகளில் வெள்ளம் புகுந்தது. சுமார் 2 மணி பெய்த மழையினால் கிள்ளானின் நீர் மட்டம் 154 மில்லிமீட்டருக்கு உயர்ந்தது என்று அவர் சொன்னார்.


