ஷா ஆலம், ஏப்.30-
மலேசிய புத்ரா பல்கலைக்கழகத்தின் (யூபிஎம்) கல்வி துறையின் தொழில்நுட்ப ஆணை சோதனைக் கூடம் மூலம் தினசரி 100 தனிநபர் பாதுகாப்பு (பிபிஇ) சீருடைகள் தயாரிக்கப்படுவதாக அத்துறையின் தலைவர் பேராசிரியர் டாக்டர் சாம்சியா ரோஸ்லான் கூறினார். இந்த ஆடைகள் பல்கலைக்கழக மருத்துவ மையத்தில் கோவிட்-19 பரவல் தடுப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள பணியாளர்களுக்கு வழங்கப்படுவதாக அவர் சொன்னார்.
இந்த ஆடை தயாரிப்பு நடவடிக்கையில் கடந்த மார்ச் மாத மத்தியில் இருந்து யுபிஎம் பல்கலைக்கழகத்தின் 20 மாணவர்கள் உட்பட பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர் என்றார் அவர். கோவிட்-19 பரவத் தொடங்கியது முதல் இந்த ஆடைகளுக்கான கோரிக்கைகள் அதிகரித்துள்ளன என்று அவர் கூறினார்.
எனவே, இவற்றை தயாரிப்பதற்கு 32 தொழில்நுட்ப தையல் இயந்திரங்கள், 6 ஓரம் தையல் இய்ந்திரங்கள், 2 பொத்தானுக்கான துளையிடும் இயந்திரங்கள் மற்றும் ஒரு துணி வெட்டும் கருவி ஆகியவை பயன்படுத்தப்படுகின்றன என்று அவர் விவரித்தார்.


