SELANGOR

சீ பார்க் காலைச் சந்தை தற்காலிகமாக மூடப்படும்; கிருமி நாசினி தெளிக்கப்படவிருக்கிறது

29 ஏப்ரல் 2020, 6:03 AM
சீ பார்க் காலைச் சந்தை தற்காலிகமாக மூடப்படும்; கிருமி நாசினி தெளிக்கப்படவிருக்கிறது

பெட்டாலிங் ஜெயா, ஏப்ரல் 29:

பெட்டாலிங் ஜெயா சீ பார்க் காலைச் சந்தை இன்று தொடங்கி தற்காலிகமான மூடப்படுகிறது என்றும் இன்னும் அறிவிக்கப்படாத நாட்கள் வரை இது நீடிக்கும் என்று கம்போங் துங்கு சட்ட மன்ற உறுப்பினர் லிம் யீ வேய் தெரிவித்தார். பெட்டாலிங் ஜெயா மாநகராட்சி மன்றம் (எம்பிபிஜே) பொது மக்கள் சமூக இடைவெளி வழிமுறைகளை பின்பற்றுவதுடன், கிருமி நாசினி தெளிக்கப்பட வழி விடுவதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது என்று அவர் மேலும் தெரிவித்தார்

" சந்தை மூடப்படுவது கோவிட்-19 நோய் பரவலை தடுக்க எடுக்கப்படும் முயற்சி. இது பொது மக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும்," என்று தமது அறிக்கையில் லிம் யீ வேய் கூறினார். சீ பார்க் காலைச் சந்தை ஒரு தனியார் நிர்வாகத்தில் இருப்பதால், மறுபடியும் திறக்கப்படும் நாள் மக்கள் நிர்ணயிக்கப்பட்ட வழிமுறைகளை கடை பிடித்து வருவதை பொறுத்து முடிவு எடுக்கப்பட உள்ளதாக அவர் சிலாங்கூர் இன்றுக்கு தெரிவித்தார்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.