ஷா ஆலம், ஏப்.29-
இங்குள்ள செமினி தொழிற்பேட்டை பகுதியில் செயல்பட்டுக் கொண்டிருந்த உணவுத் தயாரிப்பு தொழிற்சாலை உடனடியாக அதன் நடவடிக்கையை நிறுத்தும்படி சிலாங்கூர் மாநில சுற்று சூழல் இலாகா (ஜேஏஎஸ்) உத்தரவிட்டுள்ளது.
1974ஆம் ஆண்டு சுற்றுச் சூழல் தர சட்டப் பிரிவு 38(1(இன் கீழ் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாக மாநில ஜேஏஎஸ் இயக்குநர் நோர் அயிஷா ஜாப்பார் தெரிவித்தார்.
நடமாட்ட கட்டுப்பாடு ஆணை காலத்தில் இதன் தயாரிப்புகளுக்கான தேவை அதிகம் இருந்ததால், இத்தொழிற்சாலை அளவுக்கு மீறிய அளவில் இயங்கியது என்றார்.
அதன் காரணமாக இதன் கழிவுப் பொருட்களின் அளவும் வரம்புக்கு மீறியது.
பிகேபி காலக் கட்டத்தில் செயல்பட அனுமதிக்கப்பட்டிருக்கும் தொழில்துறைகள் 1974ஆம் சுற்றுச் சூழல் தர சுற்றறிக்கைக்கு கட்டுப்பட்டு செயல்படுவது அவசியமாகும் என்று இன்று வெளியிடப்பட்ட ஓர் அறிக்கையில் நோர் அயிஷா கூறினார்.


