ஷா ஆலம், ஏப்.29-
அனுமதி அளிக்கப்பட்டுள்ள வர்த்தக அல்லது இலகு தொழிற்துறை நிறுவனங்கள் வரைறுக்கப்பட்டுள்ள காலத்திற்கு அதிகமாக செயல்பட விரும்பினால், ஆவணங்களைத் தயார் செய்யும்படி காஜாங் நகராண்மைக் கழகம் (எம்பிகேஜெ) அறிவித்தது.
அந்த ஆவணத்தில் சம்பந்தப்பட்ட நிறுவனம் 12 மணி நேரத்திற்கு குறைவாகஅல்லது மிகுதியாக செயல்படுவது குறித்து தெரிவிக்க வேண்டும்.
நடமாட்ட கட்டுப்பாடு ஆணை அமலில் உள்ள நேரத்தில் சம்பந்தப்பட்ட நிறுவனத்தின் தயாரிப்பு பொருளின் தேவையைப் பொறுத்த அதற்கு அங்கீகாரம் அளிக்கப்படும்.பிகேபி காலக் கட்டத்தில் செயல்படுவதற்கு எம்பிகேயின் அங்கீகாரத்தை அது முதலில் பெற்றிருப்பது அவசியமாகும்.
ஆவணங்களை pelesenan_psrp@mpkj.gov.my என்ற மின் அஞ்சல் மூலம் எம்பிகேவிடம் சமர்ப்பிக்கப்பட்டு 24 மணி நேரத்தில் அதற்கான பதில் அனுப்பப்படும் என்று அந்த அறிக்கை கூறியது.


