ஷா ஆலம், ஏப்ரல் 28:
சிலாங்கூரில் மூன்று பகுதிகள் மஞ்சள் மண்டலத்தில் இருந்து பச்சை மண்டலமாக மாறியுள்ளது கோவிட்-19 நோய் தடுப்பு நடவடிக்கைகள் வெற்றியை அளிக்கத் தொடங்கியுள்ளது சிலாங்கூர் மாநில கோவிட்-19 தடுப்பு பணிக்குழுவின் (எஸ்திஎப்சி) தலைவர் டத்தோ ஸ்ரீ டாக்டர் ஸூல்கிப்லி அமாட் தெரிவித்தார். சிலாங்கூர் மாநில அரசாங்கத்தின் பல்வேறு முயற்சிகள் நோய் சம்பவங்களின் எண்ணிக்கையை குறைக்க வழிவகுத்தது என்று அவர் விவரித்தார்.
" சிலாங்கூர் மாநிலம் தொடர்ந்து கோவிட்-19 நோய் எதிர்ப்பு போராட்டத்தில் வெற்றிகளை பதிவு செய்து வருகிறது. பாசிர் பாஞ்சாங் மற்றும் தஞ்சோங் காராங் ஆகிய இரண்டு பகுதிகள் மட்டுமே பச்சை மண்டலத்தில் இருந்து மஞ்சள் மண்டலமாக மாறியுள்ளது," என்று தமது அகப்பக்கத்தில் பதிவு செய்துள்ளார். எஸ்திஎப்சியின் அதிகாரப் பூர்வ தகவலின்படி நேற்றையதினம் வரை பாத்தாங் பெர்ஜுந்தை, ஈஜோக் மற்றும் ஜெராம் ஆகிய பகுதிகள் பச்சை மண்டலங்களாக அறிவிக்கப் பட்டது. இந்த பகுதிகளில் எந்த ஒரு புதிய சம்பவங்களும் பதிவு செய்யப்படவில்லை என ஸூல்கிப்லி மேலும் குறிப்பிட்டார்.


