NATIONAL

செலாயாங் மொத்த வியாபாரிகள் மற்றும் மொத்த சந்தை வணிகர்கள் அனைவரும் கோவிட்-19 பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவர் !!!

28 ஏப்ரல் 2020, 7:35 AM
செலாயாங் மொத்த வியாபாரிகள் மற்றும் மொத்த சந்தை வணிகர்கள் அனைவரும் கோவிட்-19 பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவர் !!!

புத்ராஜெயா, ஏப்ரல் 28:

செலாயாங் மொத்த வியாபாரச் சந்தையில் வணிகம் நடத்தும் மொத்த வியாபாரிகள் மற்றும் வணிகர்கள் அனைவரும் கோவிட்-19 நோய் பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவார்கள் என மூத்த அமைச்சர் (பாதுகாப்பு) டத்தோ ஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப் கூறினார். பரிசோதனையில் எதிர்மறையான முடிவுகளை கொண்ட வணிகர்கள் மட்டுமே மீண்டும் வியாபார நடவடிக்கையில் ஈடுபட அனுமதிக்கப்படுவார்கள் என்று அவர் மேலும் தெரிவித்தார். இருந்தாலும், சம்பந்தப்பட்டவர்கள் தங்களது மருத்துவமனை அல்லது சுகாதார கிளினிக் உறுதி அட்டைகளை காட்ட வேண்டும் என்று கூறினார்.

" அப்படி உறுதி அட்டைகள் இருந்தால் மொத்த வியாபாரிகள் அல்லது லாரி ஓட்டுனர்கள் செலாயாங் மொத்த வியாபாரச்  சந்தையில் தங்களது வணிகத்தை மேற்கொள்ள முடியும்," என்று இன்று புத்ராஜெயாவில் நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் இவ்வாறு அவர் பேசினார்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.