கோலாலம்பூர், ஏப்.27-
மே 12ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ள நடமாட்ட கட்டுப்பாட்டு ஆணை முடிவுக்கு வந்தால், சுத்தமான காற்றை சுவாசிக்கும் வாய்ப்பு பறி போகக் கூடும் என்பதால் வாய்ப்புள்ள போதே இயற்கையின் பசுமையை மதித்து போற்றுங்கள்.
கோவிட்-19 பரவலைத் தடுக்க நாடு முழுவதிலும் விதிக்கப்பட்டுள்ள நடமாட்ட கட்டுப்பாடு ஆணையானது சுற்றுச் சூழலுக்கு நன்மையை அளித்துள்ளது என்ற்ய் சுற்றுச் சூழல் மற்றும் நீீீர்வளத்துறை அமைச்சர் டத்தோ துவான் இப்ராஹிம் துவான் மான் கூறினார்.
செராஸ் (கோலாலம்பூர்), புத்ராஜெயா, ஷா ஆலம், ஈப்போ, பினாங்கு, சிரம்பான், ஜோகூர் பாரு மற்றும் கோத்தா கினபாலு ஆகிய பகுதிகளில் காற்றின் தரம் மேம்பட்டுள்ளதாக ஆய்வு காட்டுவதாக அவர் சொன்னார். இந்த நிலை நடமாட்ட கட்டுப்பாடு ஆணை அகற்றப்பட்டது மீண்டும் சீர்குலைந்துவிடும் என்ற போதிலும் மேற்கண்ட தகவல் மனதிற்கு சிறு ஆறுதலாக உள்ளது என்றார் அவர்.
பிகேபி அகற்றப்பட்டதும் பொது மக்கள் தங்கள் வழக்கமான பணிகளில் ஈடுபடுவதற்காக அங்கும் இங்கும் வாகனங்களில் பயணம் செய்யத் தொடங்குவர். தொழிற்சாலைகள் மீண்டும் செயல்படத் தொடங்கியதும் அவற்றில் இருந்து வெளியேறும் கார்பன், மோனோல்சிடாம் சல்ஃபேர் மற்றும் நைற்றோஜின் டியோக்சைட் போன்ற வாயூக்கள் காற்றின் தூய்மையை மீண்டும் மாசுபடுத்தும்.


