ஷா ஆலம், ஏப்.27-
கோவிட்-19 பரவல் தொற்றுக்கு இலக்கான கிளந்தான் மற்றும் கெடா மாநிலங்களைச் சேர்ந்தவர்களில், நேற்றைய நிலவரப்படி தலா 5 பேர் மட்டுமே இன்னும் சிகிச்சை பெற்று வருகின்றனர். அதே வேளையில், பேராக் மற்றும் பினாங்கு மாநிலங்களில் தலா 8பேர் மட்டுமே சிகிச்சை பெற்று வருகின்றனர். பாபுவானில் 2 சம்பங்கள் மட்டுமே எஞ்சியுள்ளன என்று தேசிய பேரிடர் உடனடி நடவடிக்கை மற்றும் தயார் நிலை மையம் (சிபிஆர்சி) தெரிவித்தது.
சம்பந்தப்பட்ட பச்சை மண்டலத்தில் தொடர்ந்து 2 வாரங்களுக்கு புதிய சம்பவங்கள் ஏதும் பதிவாகவில்லை என்றால் மட்டுமே அது தொற்றில் இருந்து முழுமையாக விடுபட்டதாகப் பிரகடணப்படுத்தும். நாட்டில் மொத்தம் 13 வட்டாரங்கள் தொடர்ந்து சிவப்பு மண்டலமாக உள்ள வேளையில் ஒட்டு மொத்த சம்பங்களின் அடிப்படையில் இன்னும் 30 வட்டாரங்கள் சிவப்பு மண்டலமாக நிலைத்துள்ளன என்று அந்த மையம் கூறியது.
சிவப்பு மண்டலமாக தொடர்ந்து நீடிக்கும் 13 வட்டாரங்களில் 3 கோலாலம்பூரிலும், ஜோகூர் மற்றும் சர்வாக்கில் தலா 2, நெகிரி செம்பிலான் மற்றும் மலாக்கா ஆகியவற்றில் தலா 1 வட்டாரம் உள்ளது;


