ஷா ஆலம், ஏப்.27-
இங்குள்ள ரமலான் சந்தை வட்டாரப் பகுதியில் உரிமம் இன்றி வர்த்தக நடவடிக்கையில் ஈடுபட்ட 3 அங்காடி கடைக்காரர்கள் மற்றும் 5 உணவுக் கடை உரிமையாளர்களுக்கும் கிள்ளான் நகராண்மைக் கழகம் (எம்பிகே) வாய்மொழி எச்சரிக்கையும் குற்றப்பதிவு அறிக்கையும் வழங்கியது.
சம்பந்தப்பட்ட அங்காடி கடைக்காரகளும் வர்த்தகர்களும் முறையான உரிமமின்றி வர்த்தகம் புரிந்ததோடு நடமாட்ட கட்டுப்பாடு ஆணையையும் பின்பற்றவில்லை என்று எம்பிகே அதன் முகநூலில் வெளியிடப்பட்ட அறிக்கையில் தெரிவித்தது.
சுங்கை ஊடாங், சிம்பாங் அம்பாட்டில் உள்ள ரமலான் சந்தை பகுதியில் உரிமம் இன்றி வாகனத்தில் இருந்தப்படியே ஒருவர் ரொட்டி போம் வியாபாரம் செய்தார்.
இதனிடையே, மேலும் 2 அங்காடி கடைக்காரர்களும் 5 உணவுக் கடை உரிமையாளர்களும் உரிமமின்றி ரந்தாவ் பாஞ்சாங், ஜாலான் கெரேத்தாப்பி லாமா, செமெந்தா மற்றும் ஜாலான் காப்பார், சுங்கை செஞ்காங் ஆகிய பகுதிகளில் உணவுப் பொருட்கள் விற்பனை செய்தது தெரிய வந்ததாக அந்த அறிக்கை கூறியது.


