ஷா ஆலம், ஏப்ரல் 25:
சிலாங்கூர் மாநிலத்தில் நேற்று மாலை 4 மணி வரை புதிதாக கோவிட்-19 நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 18 ஆகவும், இது வரையில் சிலாங்கூரில் மொத்தம் 1,387 சம்பவங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக உலு லங்காட் மாவட்டத்தில் நேற்று மட்டும் 15 புதிய கோவிட்-19 நோயால் பாதிக்கப்பட்டவர்களை அடையாளம் காணப்பட்டுள்ளது என சிலாங்கூர் மாநில சுகாதார இலாகாவின் நெருக்கடி நடவடிக்கை மற்றும் தயார்நிலை மையம் தெரிவித்தது. இதனிடையே பெட்டாலிங் மாவட்டத்தில் ஒரு இறப்பு ஏற்பட்டதை தொடர்ந்து, சிலாங்கூர் மாநிலத்தில் 15 இறப்பு சம்பவங்கள் ஏற்பட்டுள்ளதை அது உறுதி செய்தது.
கோம்பாக்கில் மேலும் இரண்டு சம்பவங்களும் வெளிநாட்டில் இருந்து திரும்பிய ஒருவருக்கும் தொற்று நோய் பரவியது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
நேற்று மாலை 4 மணி வரை சிலாங்கூரில் இன்னும் 276 நோயாளிகளும் மற்றும் 1,084 நோயாளிகள் குணமடைந்து வீடு திரும்பியதாகவும் தனது அதிகாரப்பூர்வ அறிக்கையில் வெளியிட்டிருக்கிறது.


