ஷா ஆலம், ஏப்ரல் 24:
சிலாங்கூர் மாநில அரசாங்கம் முயற்சியில் தொடங்கப்பட்ட கோவிட்-19 நோய் சமூக பரிசோதனை 5400 நபர்களை தாண்டியது என்று சிலாங்கூர் மாநில மந்திரி பெசார் டத்தோ ஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார். இது நமது இலக்கை தாண்டிவிட்டது என்று பெருமிதம் கொண்டார் அவர்.
" மக்களின் ஆதரவு மற்றும் ஒத்துழைப்பு மிகவும் சிறப்பாக இருந்தது. சமூக பரிசோதனை நமது இலக்கை தாண்டிவிட்டது. இருந்தாலும், சமூக பரிசோதனையை தொட்டு முழுமையான அறிக்கையை எதிர் வரும் ஞாயிற்றுக்கிழமை வெளியிடப்படும்," என்று சிலாங்கூர் தலைமையகத்தில் நடைபெற்ற கோவிட்-19 நோய் தடுப்பு நடவடிக்கைக்குழு வெளியிட்டுள்ளது.


