ஷா ஆலம், ஏப்.22-
கிருமிநாசினி தெளிப்பு நடவடிக்கை மேற்கொள்வதற்கு வசதியில்லாத மலிவு விலை அடுக்குமாடி கட்டடங்களில் சுபாங் ஜெயா நகராண்மை கழகம் (எம்பி எஸ்ஜே) அந்நடவடிக்கையை மேற்கொண்டதாக அதன் தலைவர் நோராய்னி ரோஸ்லான் கூறினார்.
“இங்கு மொத்தம் 122 மலிவு விலை அடுக்குமாடி குடியிருப்புகள் உள்ளன. அவற்றுள் 40 சொந்த நிர்வாக அமைப்புகளைத் தோற்றுவிக்க இயலாத காரணத்தால் சிலாங்கூரின் தீயணைப்பு மற்றும் மீட்பு படையின் ஒத்துழைப்புடன் எம்பிஎஸ்ஜே கிருமி நாசினி தெளிப்பு நடவடிக்கையை மேற்கொண்டது” என்று அவர் சொன்னார்.
இன்று முதல் முறையாக மேற்கொள்ளப்பட்ட இந்த நடவடிக்கையில் சொந்த நிர்வாக அமைப்பைக் கொண்டிராத அடுக்குமாடி குடியிருப்புகளில் கிருமி நாசினி தெளிப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக அவர் கூறினார். அதே வேளையில், இந்த மாத இறுதி வரை மேற்கொள்ளப்படவிருக்கும் இந்நடவடிக்கையின் போது கையாள வேண்டிய நடைமுறைகள் குறித்து குடியிருப்பாளர்களுக்கு போம்பா விளக்கமளித்தது.


