RENCANA PILIHAN

கோம்பாக் மற்றும் உலு சிலாங்கூர் மாவட்டங்களில் கோவிட்-19 பரிசோதனை நாளை ஆரம்பம் !!!

21 ஏப்ரல் 2020, 9:00 AM
கோம்பாக் மற்றும் உலு சிலாங்கூர் மாவட்டங்களில் கோவிட்-19 பரிசோதனை நாளை ஆரம்பம் !!!
கோம்பாக் மற்றும் உலு சிலாங்கூர் மாவட்டங்களில் கோவிட்-19 பரிசோதனை நாளை ஆரம்பம் !!!

ஷா ஆலம், ஏப்ரல் 21:

கோவிட்-19 வைரஸ் நோய் பரவி வருவதை தடுக்கும் நோக்கில் சிலாங்கூர் மாநில அரசாங்கம் காரில் இருந்து கொண்டே கோவிட்-19 பரிசோதனையை இலவசமாக கோம்பாக் மற்றும் உலு சிலாங்கூர் மாவட்டங்களில் நாளை தொடங்கி இரண்டு நாட்களுக்கு நடத்த இருக்கிறது.

கோம்பாக் மாவட்ட அலுவலகத்தில் தாமான் டேசா மாஸ், பண்டார் கண்ட்ரி ஹோம்ஸ் மற்றும் தாமான் மெலாவத்தி வீடமைப்பு பகுதிகளை சேர்ந்த பொது மக்கள் பரிசோதனை மேற்கொள்ளலாம்.

உலு சிலாங்கூர் கெனாங்கா அடுக்குமாடி குடியிருப்பு, செம்பாக்கா அடுக்குமாடி குடியிருப்பு மற்றும் டாலியா அடுக்குமாடி குடியிருப்பு பொது மக்கள் புக்கிட் பெருந்தோங் கோல்ப் கிளப்பில் பரிசோதனை மேற்கொள்ள முடியும்

மருத்துவ பணியாளர்கள் காலை 9 மணி தொடங்கி 12 மணி வரையிலும் பிறகு 2 மணி தொடங்கி மாலை 6 மணி வரை கோவிட்-19 பரிசோதனைகளை  மேற்கொள்வார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேல் விவரங்களுக்கு 013-2477426 எண்ணை தொடர்பு கொள்ளலாம் .

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.