NATIONAL

உள்நாட்டு பொருளாதார வளர்ச்சியை ரமலான் மின் சந்தை உறுதிசெய்யும்!

21 ஏப்ரல் 2020, 3:08 AM
உள்நாட்டு பொருளாதார வளர்ச்சியை ரமலான் மின் சந்தை உறுதிசெய்யும்!

ஷா ஆலம், ஏப்.21-

சிலாங்கூரில் ரமலான் மின் சந்தையை உருவாக்குவதன் நோக்கங்களில் ஒன்று உள்நாட்டு பொருளாதாரத்தின் வளர்ச்சியை உறுதி செய்வதாகும் என்று மந்திரி பெசார் அமிருடின் ஷாரி கூறினார்.

“இது மாநிலத்தின் சிறு வர்ததகத் துறையைக்கு முக்கியமான ஒன்றாகும் இந்த ரமலான் மின் சந்தைக்கு தகுதி பெறும் அங்காடி கடைக்காரர்களின் விவரம் ‘ஹிஜ்ரா சிலாங்கூர்’ வசம் இருக்கும் பட்டியலுடன் ஒப்பிட்ட பின்னர் நாளை அறிவிக்கப்படும்” என்றார் அவர்.

“இதுவரை ரமலான் மாதத்தில் மின் சந்தை நடைபெறுவதற்காக 10 மண்டபங்களும் 67 உணவங்களும் அடையாளம் காணப்பட்டுள்ளன முன்பு வாடிக்கையாளர்கள் அமர்ந்து உணவருந்தும் இடங்கள் இப்போது உணவுகளை விநியோகிக்கும் இடங்களாகச் செயல்படவிருக்கின்றன”. என்று அவர் சொன்னார்.

“உணவு வகைகளுக்கான முன் பதிவு இரவு 10 மணி தொடர்ந்து நண்பகல் 1 மணி வரை நடைபெறும் நடைமுறையை நாங்கள் அறிமுகப்படுத்தவுள்ளோம். இதன் மூலம் சம்பந்தப்பட்ட வர்த்தகர்கள் தேவையானவற்றை தயார் செய்யவும் விரயம் ஏற்படுவதைத் தவிர்க்கவும் இயலும்” என்று அல் ஹிஜ்ரா தொலைக்காட்சிக்கு அளித்த நேர்காணலில் அமிருடின் தெரிவித்தார்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.