ஷா ஆலம், ஏப்.20-
ரமலான் காலத்திற்கு தேவையான அரசி போன்ற அத்தியாவசிய பொருட்கள் யாவும் தேவையாள அளவிற்கும் அதிகமான கையிருப்பு உள்ளதாக அரசாங்கம் உத்தரவாதம் அளித்தது.
கைவசம் உள்ள உள்நாட்டு மற்றும் இறக்குமதி செய்யப்பட்ட பொருட்கள் யாவும் உள்நாட்டு தேவையைத் தொடர்ந்து நிறைவேற்றும் அளவிற்கு போதுமான மற்றும் நிலையாக இருக்கின்றன என்று பாதுகாப்புக்கான முதன்மை அமைச்சர் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சபரி யாக்கோப் கூறினார்.
அதே வேளையில, காய்கறி போன்ற உணவுப் பொருட்களும் போதுமான அளவில் இருப்பதாக விவசாயம் மற்றும் உணவுத் துறை அமைச்சு உத்தரவாதம் அளித்துள்ளது என்றும் அவர் சொன்னார்.
எனவே, தேவையான உணவுப் பொருட்கள் இருப்பதாக உத்தரவாதம் அளிக்கப்பட்டுள்ளதால், பொது மக்கள் கவலைக் கொள்ளத் தேவையில்லை என்றார் அவர்.
இதனிடையே 935 சில்லரை வணிகம், 247 மொத்த சந்தை மற்றும் 31 தொழிற்சாலைகள் ஆகியவற்றின் மீது உள்நாட்டு வர்த்தகம் மற்றும் பயனீட்டாளர் விவகார அமைச்சு அன்றாட கண்காணிப்பு நடவவடிக்கையை மெற்கொண்டது.“ஒட்டு மொத்தத்தில், நடப்புத் தேவையை நிறைவேற்றும் வகையில் அத்தியாவசியப் பொருட்கள் உள்ளன” என்றார் அவர்.


