ஷா ஆலம், ஏப்.20-
கோலாலம்பூர் மொத்த சந்தையின் சுற்று வட்டாரப் பகுதியில் உள்ள பூசாட் பண்டார் உத்தாரா மற்றும் குடியிருப்பு பகுதிகளில் இன்று கடுமையாக்கப்பட்ட நடமாடும் கட்டுப்பாடு ஆணை (பிகேபிடி) விதிக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்புக்கான முதன்மை அமைச்சர் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோர் தெரிவித்தார்.
சுகாதார அமைச்சின் ஆலோசனையின் பேரில் அமல்படுத்தப்பட்டுள்ள இந்த ஆணை மே 3ஆம் தேதி வரை நீடிக்கும் என்று அவர் சொன்னார்.
இந்த ஆணை அமல்படுத்தப்படும் காலக் கட்டத்தில் கடுமையாக்கப்பட்ட பிகேபி அமல்படுத்தப்படும் ஆறாவது பங்குதியான இங்கு கோவிட்-19 தொற்று பரவலைத் தடுக்கும் நடவடிக்கை தீவிரமாக மேற்கொள்ளப்படும் என்றார் அவர்.
இங்கு குடியிருப்போர் அனைவரும் அமைதி காப்பதோடு மலேசிய சுகாதார அமைச்சின் பணியாளர்களுக்கு முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று புத்ராஜெயாவில் நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் அமைச்சர் கூறினார். இந்த பிகேபிடி ஆணையில் இங்குள்ள எட்டு குடியிருப்பு பகுதிகள் உட்படுத்தப்பட்டுள்ளனர் என்று அவர் சொன்னார்.


