ஷா ஆலம், ஏப்.20-
சிலாங்கூரில் கோவிட்-19 உறுதி செய்யப்பட்ட நபர்களில் 71 விழுக்காட்டினர் முழுமையாக குணமடைந்துள்ளனர் என்று மந்திரி பெசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி தெரிவித்தார்.
இவ்வேளையில் , இந்தத் தொற்று நோயை எதிர்கொள்ள அல்லும் பகலும் கடுமையாகப் பாடுபட்டு வரும் மருத்துவத்துறை பணியாளர்களுக்கு அவர் நன்றி தெரிவித்துக் கொண்டார்.
“சிலாங்கூரில் பாதிக்கப்பட்டவர்களில் 71 விழுக்காட்டினர் குணமடைந்துள்ளனர் என்ற நற்செய்தி கேட்டு மட்டற்ற மகிழ்ச்சி. மருத்துவத் துறை பணியாளர்கள் அனைவருக்கும் நன்றி” என்று அவர் தனது டூவிட்டரில் செய்தி பதிவிட்டார்.
நேற்று நன்பகல் வரையில் மொத்தம் 1.343 கோவிட்-19 சம்பவங்கள் பதிவு செய்யப்பட்டதாக சிலாங்கூர் மருத்துவ இலாகா, தயார்நிலை நெருக்கடி விரைவுநடவடிக்கை மையத்தின் (சிபிஆர்சி) புள்ளவிவர அறிக்கை தெரிவித்தது.
அந்த எண்ணிக்கையில், மொத்தம் 958 பேர் குணமைடந்துள்ளன வேளையில் 12 பேர் மரணமடைந்துள்ளனர். இன்னும் 373 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்..


