ஷா ஆலம், ஏப்.18-
ஷா ஆலம் வட்டார மக்கள் இப்போது வாகனத்தில் அமர்ந்தவாறு கோவிட்-19 தொற்று பரிசோதனையை மேற்கொள்ளலாம். இந்த வசதி ஷா ஆலம் செெெசெக்சன் 7-இல் அமைந்துள்ள ராஜா மூடா மூசா மண்டபத்தில் ஏற்படுத்தப்பட்டுள்ளது என்று சிலாங்கூர் மாநில மந்திரி பெசார் டத்தோ ஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.
மூத்த குடிமக்கள் தவிர்த்து தொற்று நோய் இருப்பதற்கான அறிகுறிகள் தென்படுவர்களும் இந்தச் சோதனைக்கு தங்களைப் பரிசோதனை செய்து கொள்ளலாம். இன்று 500 பேர்களுக்கு மேற்கொள்ளப்படும் இலக்கு கொண்டிருக்கிறோம் என்று அவர் டிிவிட்டரில் பதிவு செய்துள்ளார். இந்த சோதனைக்கு கட்டணம் ஏதும் இல்லை என்றார் அவர். காலை 10 மணி முதல் நண்பகல் 12 மணி வரைையும் பிறகு 2 மணி தொடங்கி மாலை 6 மணி வரை இந்த சேவை இருக்கும். இதன் முடிவுகள் 24 அல்லது 48 மணி நேரத்திற்குள் பெற்றுக் கொள்ளலாம் என்று அவர் மேலும் தெரிவித்தார்.
" நாம் முதலில் சிவப்பு பகுதிகளாக அடையாளம் காணப்பட்டுள்ள இடங்களில் பரிசோதனைகள் நடத்துகிறோம். நாளை தொடங்கி 20 மருத்துவ குழுக்கள் பிரிக்கப்பட்டு ஒவ்வொரு நாளும் பணியில் அமர்த்தப் படுவார்கள்," என்று டிவிட்டரில் ஒருவர் கேள்விக்கு பதிலளிக்கையில் இவ்வாறு அமிருடின் ஷாரி விவரித்தார்.


