ஷா ஆலம், ஏப்.17-
கோவிட்-19 தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கையில் முன் வரிசை பணியாளர்களாக ஈடுபட்ட மாநில அரசாங்க பணியாளர்கள் மீது இன்று சுகாதார பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது என்று மந்திரி பெசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார். சம்பந்தப்பட்ட பணியாளர்கள் அவர்களின் கடமையை ஆற்றிய போது கோவிட்-19 தொற்றுக்கு இலக்காமல் இருந்ததை உறுதி செய்ய இப்பரிசோதனை நடவடிக்கை மாநில அரசு செயலகத்தில் மேற்கொள்ளப்பட்டதாக அவர் சொன்னார்.
சிலாங்கூரில் மொத்தம் 17 தனிமைப்படுத்தும் மையங்கள் உள்ளன. அவற்றில் பெரும்பாலான மாவட்ட அதிகாரிகள், ஊராட்சி மன்ற பணியாளர்கள் பணிக்கமர்த்தப்பட்டுள்ளனர் என்றார் அவர்
எனவே, அவர்களுக்கு கோவிட்-19 தொற்றாததை உறுதி செய்ய அவர்களின் ‘மாதிரிகள்’ பரிசோதனைக்காக எடுக்கப்பட்டனெ என்று அவர் சொன்னார்
இதனிடையே, வெளிநாடுகளில் இருந்து திரும்பிய 3 ஆயிரத்திற்கும் அதிகமானோர் சிலாங்கூரில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் என்ற தகவலையும் அமிருடின் வெளியிட்டார்.


