ஷா ஆலம், ஏப்ரல் 17:
கிள்ளான் பள்ளத்தாக்கின் ஏழு பகுதிகளில் 1.2 மில்லியன் பயனீட்டாளர்களை பாதிக்கும் சுமார் 1,292 பகுதிகளில் தற்போது திட்டமிடப்படாத நீர் விநியோக தடங்கல் ஏற்பட்டுள்ளது என்று சிலாங்கூர் மாநில நீர் நிர்வாக நிறுவனம் இன்று ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
பிரதான நீர்த்தேக்கங்களில் குறைந்த அளவு இருப்பதால் கோலாலம்பூர், பெட்டாலிங், கிள்ளான், ஷா ஆலம், கோல சிலாங்கூர், ஹுலு சிலாங்கூர், கோம்பக் மற்றும் கோல லங்காட் ஆகிய ஏழு பகுதிகள் நீர் பற்றாக்குறையை அனுபவிக்கும் என்று ஆயர் சிலாங்கூர் தகவல் தொடர்புத் தலைவர் அப்துல் ஹலேம் மாட் சோம் தெரிவித்துள்ளார்.


