ஷா ஆலம், ஏப்ரல் 14:
டுசுன் துவா சட்ட மன்ற தொகுதியின் உறுப்பினர் எட்ரி பைசால் எடி யூசுப் சுங்கை லூய் மக்களுக்கு உணவு பொருட்களான கோழி, முட்டை மற்றும் காய்கறிகளை சேகரித்து வழங்க முடிவு எடுத்துள்ளார். கட்டுப்படுத்தப்பட்ட நடமாடும் கட்டுப்பாடு ஆணையினால் (பிகேபிடி) சுங்கை லூய் மக்கள் வெளியே சென்று பொருட்களை வாங்க முடிய இயலாது. ஆகவே, தேசிய பேரழிவு நிர்வாக அமைப்புக்கு (நட்மா ) உணவு பொருட்களை விநியோகம் செய்ய அரசாங்கம் பொறுப்பினை வழங்கிய நிலையில் கொடுக்கப்பட்ட பொருட்கள் பொருத்தமானதாக இல்லை என்று ஏற்கனவே எட்ரி பைசால் தெரிவித்திருந்தது அனைவரும் தெரிந்த ஒன்றே.
" அத்தியாவசிய பொருட்களான முட்டை, காய்கறி மற்றும் கோழி ஆகிய சத்துள்ள உணவு பொருட்களை விநியோகம் முயற்சி எடுக்கப்படும். இருந்தாலும், நட்மா டின்னில் அடைக்கப்பட்ட பொருட்களை தவிர்த்து சத்துள்ள உணவுகளை வழங்க வேண்டும்," என்று அவர் வேண்டுகோள் விடுத்தார்.


