ஷா ஆலம், ஏப்.14-
கோவிட்-19 பரவல் குறித்து சமூக ஊடங்களில் வெளிவரும் தகவல்களின் நம்பகத்தன்மையை உறுதி செய்யும்படி பொது மக்களை மந்திரி பெசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கேட்டுக் கொண்டார்.
போலியான தகவல்களை பகிரும் தனிநபர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் நினைவுறுத்தினார்.
“சமூக வலைத்தளங்களில் பகிரப்படும் தகவல்கள் உண்மையானவை என்பதை உறுதி செய்ய வேண்டும். தவறியும் போலியான தகவல்களைப் பகிர வேண்டாம்” என்று சிலாங்கூர் மக்களை அமிருடின் கேட்டுக் கொண்டார்.
போலியான தகவல்களைப் பகிரும் தனிநபர்கள் மீது 500 குற்றவியல் சட்டத்தின் கீழ் மற்றும் தொடர்பு பல்லூடகச் சட்டத்தின் 233 பிரிவின் கீழ் குற்றஞ்சாட்டப்படும் என்றார் அவர். போலியான தகவல்களைப் பகிரும் பொறுப்பற்ற தரப்பினர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று தொடர்பு பல்லூடக அமைச்சு அன்மையில் எச்சரித்ததை அவர் நினைவுகூர்ந்தார்.


