ஷா ஆலம், ஏப்.14-
நாடு முழுவதிலும் சிவப்பு மண்டலமாக அறிவிப்பட்டுள்ள மாவட்டங்களின் எண்ணிக்கையில் மாற்றம் ஏதும் இன்றி 26 ஆக நேற்று நிலைநிறுத்தப்பட்டது என்று மலேசிய சுகாதார அமைச்சின் (கேகேஎம்) தயார் நிலை மற்றும் உடனடி நடவடிக்கை அமைப்பு (சிபிஆர்சி) அறிவித்தது.
இவற்றில் தொற்று உறுதிசெய்யப்பட்ட 515 சம்பவங்களைக் கொண்ட லெம்பா பந்தாய் முதலிடத்திலும் உலு லங்காட் மற்றும் பெட்டாலிங் ஆகிய மாவட்டங்கள் முறையே 419 மற்றும் 346 சம்பவங்களைப் பதிவு செய்து இரண்டாவது, மூன்றாவது இடங்களில் உள்ளன.
இவைத் தவிர்த்து 17 மாவட்டங்கள் ஆரஞ்சு மண்டலமாகவும் 77 மாவட்டங்கள் மஞ்சள் மண்டலமாகவும் சம்பவங்கள் ஏதும் பதிவு செய்யாத பச்சை மண்டலமாக 29 மாவட்டங்களகப் பிரகடணப்படுத்தப் பட்டுள்ளதாக கேகேஎம் புள்ளிவிரப் பட்டியல் கூறியது. அதிக எண்ணிக்கையிலான தொற்று சம்பவங்களைப் பதிவு செய்துள்ள மாநிலமாக சிலாங்கூர் 1,249 சம்பவங்களுடன் முதலிடத்தில் உள்ளது.
41 தொற்று உறுதி செய்யப்பட்ட சம்பவங்களைப் பதிவு செய்யும் மாவட்டங்கள் சிவப்பு மண்டலமாகவும் 21 முதல் 40 சம்பவங்கள் உள்ள மாவட்டங்கள் ஆரஞ்சு மண்டலம் என்றும் 1 முதல் 20 சம்பங்கள் உள்ள பகுதி மஞ்சள் மண்டலமாகவும் அறிவிக்கப்படுகின்றன. தொற்று சம்பவங்களை பதிவு செய்யாத பகுதிகள் பச்சை மண்டலமாகப் பிரகடணப்படுத்தப்பட்டுள்ளன.


