ஷா ஆலம், ஏப்ரல் 14:
கடந்த மார்ச் மாதம் தொடங்கி கிள்ளான் ஆற்றில் பயன்படுத்திய முகமூடிகள், கையுறைகள் மற்றும் கிருமி நாசினி கொள்கலன்கள் ஆகியவை வீசப்படுகிறது என்று லன்டாசான் லுமாயான் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் சைபூல் அஸ்மான் நோர்டின் கூறினார். கிள்ளான் ஆற்றில் சுத்தம் செய்யும் பொறுப்பை ஏற்றுள்ள நிறுவனமான லன்டாசான் லுமாயான், இந்த குப்பைகள் அனைத்தும் புதியவை ஆகும் என்று அவர் மேலும் தெரிவித்தார்.
" பொது மக்கள் பயன்படுத்திய முகமூடிகள், கையுறைகள் மற்றும் கிருமி நாசினி கொள்கலன்களைை முறையான வழியில் அல்லது குப்பை தொட்டிகளில் வீச வேண்டும். கண்ட இடங்களில் இந்த காலகட்டத்தில் பயன்படுத்தி வரும் பொருட்களை வீீீீசக் கூடாது. கால்வாய்களில் வீசப்படும் குப்பைகள் கடைசியில் ஆற்றில் கலந்து விடுகிறது. இதுவே ஆற்றின் தூய்மைக்கேட்டிற்கு முக்கிய காரணமாக அமைகிிறது," என்று தமது அறிக்கையில் அவர் தெரிவித்திருக்கிறார்.


