போர்ட் கிள்ளான், ஏப்ரல் 14:
மதுபானங்களை மட்டும் விற்பனை செய்த ஒரு மளிகைக் கடையை கிள்ளான் நகராண்மை கழகம் (எம்பிகே) மூடும்படி கட்டளை பிறப்பித்துள்ளது என்று அதன் துணைத் தலைவர் எல்யா மாரினி டார்மின் கூறினார். போர்ட் கிள்ளான் நகரில் புவா மென்தெகா சாலையில் இந்த மளிகைக் கடை அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும் விவரிக்கையில், எல்யா மாரினி சம்பந்தப்பட்ட கடை முறையான வணிக உரிமம் பெற்றிருந்தாலும் சட்டத்திற்கு புறம்பாக செயல்பட்டதாக குற்றச்சாட்டினார். வணிக உரிம பிரிவின் அமலாக்க அதிகாரிகள் நடமாடும் கட்டுப்பாடு ஆணையை (பிகேபி) கண்காணிக்கும் பணியில் நேற்று மாலை 4.30 மணியளவில் ஈடுபட்ட போது மேற்கண்ட கடையை மூட ஆணையிட்டனர் என்று அவர் மேலும் தெரிவித்தார்.
" நமது அமலாக்க அதிகாரிகள், சம்பந்தப்பட்ட கடை மதுபானங்களான பீர் மற்றும் 5% கீழ் உள்ள ஆல்கஹால் பானங்களை விற்பனை செய்து வருகிறது என கண்டு பிடித்தனர். வணிக உரிமையாளருக்கு எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ளது. இதற்கு பிறகு வணிக உரிம விதிமுறைகளை பின்பற்றி நடக்க வேண்டும்," என்று தமது அறிக்கையில் அவர் கூறினார்.


