புத்ராஜெயா, ஏப்ரல் 14:
கடந்த ஏப்ரல் 1-இல் தொடங்கிய நடமாடும் கட்டுப்பாடு ஆணையின் (பிகேபி) இரண்டாம் கட்டம் இன்றோடு முடிவடைந்து நாளை தொடங்கி ஏப்ரல் 28 வரை பிகேபி நடவடிக்கையின் மூன்றாம் கட்டம் அமல்படுத்தப்படுகிறது.கோவிட்-19 நோய் பரவல் அல்லது சங்கிலியை நாம் துண்டிக்க கூடிய நடவடிக்கையாக பிகேபி தொடர்ந்து செயல்படும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.
பிரதமர் டான்ஸ்ரீ முஹீடின் யாசீன் பிகேபி காலகட்டத்தை நீட்டிக்கப்படும் என அறிவிக்கும் போது நாட்டு மக்கள் அனைவரும் கோவிட்-19 நோய் பரவலை சேர்ந்து தடுக்க அரசாங்கம் எடுக்கும் அனைத்து முயற்சிகளுக்கும் ஆதரவு வழங்க வேண்டும் என்று வலியுறுத்தியது நினைவுக்கு வருகிறது. இந்த நோய் இன்னும் முழுமையாக கட்டுப்படுத்தப் படவில்லை என்பதை நாம் அனைவரும் உணர வேண்டும்.
அனைத்து மக்களும் இணைந்து இந்த சவாலை எதிர் கொண்டால் ஆண்டவன் புண்ணியத்தில் இந்த நோயை கட்டுப்பாட்டில் கொண்டு வர முடியும் என பிரதமர் கூறியது அனைவரும் மறக்க முடியாது.
இதனிடையே, பல்வேறு துறைகள் கட்டம் கட்டமாக திறக்கப்படும் என்றும் இருந்தாலும் சுகாதாரத்தை அடிப்படையாகக் கொண்ட சில வழிமுறைகளையும் பின்பற்ற வேண்டி இருக்கும். அது மட்டுமல்லாமல், தொடர்ந்து மிகவும் கண்டிப்பான நடமாடும் கட்டுப்பாடு ஆணையை (பிகேபி) கடைபிடிக்க வேண்டும் என அனைத்து தொழில் துறையை சேர்ந்தவர்களுக்கும் நினைவு படுத்தப்பட்டுள்ளது.
- BERNAMA


