ஷா ஆலம், ஏப்ரல் 14:
தேசிய பேரழிவு நிர்வாக அமைப்பு (நட்மா ) சுங்கை லூய் மக்களுக்கு வழங்கிய உணவு பொருட்கள் பொருத்தமாக இருக்கிறதா என்று மறுபரிசீலனை செய்ய வேண்டும் என டூசுன் துவா சட்ட மன்ற தொகுதியின் உறுப்பினர் எட்ரி பைசால் எடி யூசுப் வலியுறுத்தினார். நடமாடும் கட்டுப்பாடு ஆணை (பிகேபி) காலகட்டத்தில் பாதிக்கப்பட்டு மக்களுக்கு டின்களில் அடைக்கப்பட்ட உணவு பொருட்கள் மற்றும் சீனி அளவு அதிகமாக உள்ள பானங்கள் வழங்கப்பட்டதை மேற்கோள்காட்டி அவர் தெரிவித்தார்.
" சுங்கை லூய் மக்கள் ஆடம்பரமான உணவு பொருட்களை கேட்கவில்லை. மாறாக, சத்துள்ள அத்தியாவசிய பொருட்களான முட்டை, வெங்காயம், காய்கறிகள் மற்றும் இறைச்சி போன்றவற்றை வழங்கினாலே போதும். கட்டுப்படுத்தப்பட்ட நடமாடும் கட்டுபாடு ஆணை (பிகேபிடி) நடைமுறையில் இருக்கும் பகுதிகளுக்கு அனுப்பப்படும் உணவு பொருட்களை நட்மா மறுபரிசீலனை செய்ய வேண்டும்," எட்ரி பைசால் எடி யூசுப் சிலாங்கூர் இன்றுக்கு அனுப்பிய செய்தியில் கூறியிருந்தார்.


