ஷா ஆலம், ஏப்ரல் 13:
சிலாங்கூர் மாநிலத்தில் கோவிட்-19 நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை இன்று குறைந்துள்ளது. இதன் மூலம் இந்நோய் தாக்கத்தை நாம் கட்டுப்படுத்த முடியும் என்ற நம்பிக்கை பிறந்துள்ளதாக சிலாங்கூர் மாநில மந்திரி பெசார் டத்தோ ஸ்ரீ அமிருடின் ஷாரி தெரிவித்தார்.
" இன்று சிலாங்கூர் மாநிலத்தில் கோவிட்-19 சம்பவங்கள் 13 மட்டுமே பதிவு செய்யப்பட்டுள்ளது. சில தினங்களுக்கு முன்பு ஒப்பிடும் போது இன்று குறைந்த நிலையில் உள்ளது ( நேற்று 53 சம்பவங்கள் மற்றும் சனிக்கிழமை 35 சம்பவங்கள்). மாநில அரசாங்கம் எடுத்துள்ள நடவடிக்கைகள் பலன் அளிக்கத் தொடங்கியுள்ளது. கோவிட்-19 நோய் சங்கிலியை நாம் அறுக்க முடியும் என்ற நம்பிக்கை எழுந்துள்ளது. #SelangorGempurCovid19,"
என்று தமது டிவிட்டரில் அமிருடின் ஷாரி பதிவு செய்துள்ளார். இது வரையில் சிலாங்கூர் மாநிலத்தில் மொத்தம் 1,249 கோவிட்-19 நோய் சம்பவங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


