ஷா ஆலம், ஏப்ரல் 13:
நடமாடும் கட்டுப்பாடு ஆணை (பிகேபி) காலகட்டத்தில் பொது மக்களுக்கு ரவாங் சட்ட மன்ற சேவை மையம் 5000-க்கும் மேற்பட்ட முகமூடிகளையும் 1000-க்கும் மேற்பட்ட அத்தியாவசிய பொருட்களையும் வழங்கியுள்ளதாக ரவாங் சட்ட மன்ற உறுப்பினர் சுவா வேய் கியாட் கூறினார். மேற்கண்ட நடவடிக்கைகள் பிகேபி முதல் கட்டம் தொடங்கியது முதல் பகுதி வாரியாக கொடுத்து வருவதாக அவர் தெரிவித்தார்.
" நாம் தொடர்ந்து பாதிக்கப்பட்டு வரும் வருமானம் குறைந்த வர்கத்தினருக்கு அத்தியாவசிய பொருட்களை வழங்கி வருகிறோம். இதன் வழி இவர்களின் பொருளாதார சுமையை குறைக்க முடியும். பிகேபி காலகட்டத்தில் பலருக்கு பொருட்களின் விநியோகம் துண்டிக்கப்பட்டுள்ளது மட்டுமின்றி வருமானமும் பாதிக்கப்பட்டுள்ளது. ஆகவே, நாங்கள் இந்த உதவிகளை கோவிட்-19 நோயால் அன்றாட வாழ்க்கை பாதிக்கப்பட்ட மக்களுக்கு தொடர்ந்து மேற்கொண்டு வருகிறோம்," என்று சிலாங்கூர் இன்றுக்கு அவர் தெரிவித்தார்.


