ஷா ஆலம், ஏப்.13-
செக்சன் 6 சந்தையில் 3 கோவிட்-19 சம்பவங்கள் ஏற்பட்டுள்ளதாக கூறப்பட்டதை அடுத்து அந்தச் சந்தைக்குச் செல்ல ஷா ஆலம் மருத்துவமனையைச் சேர்ந்த மருத்துவர் ஒருவர் தடுத்தார் என்று கூற்றை மலேசியா சுகாதார அமைச்சு மறுத்தது.
சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலில் உண்மை இல்லை என்றும் அச்சந்தைக்குச் செல்வதற்கு மருத்துவர் எவரும் தடை விதிக்கவில்லை என்று அமைச்சின் அறிக்கை தெரிவித்தது.
இதனிடையே, நடமாட்ட கட்டுப்பாடு காலக் கட்டத்தில் நிறுவனங்களை செயல்பட அனுமதிப்பதற்காக சில நிறுவனங்களிடம் இருந்து விவரங்களைச் சேகரிக்கும் நடவடிக்கையில் அனைத்துலக வாணிப, மற்றும் தொழிற்துறை அமைச்சு (மிட்டி) ஈடுபட்டதாக கூறப்படுவதை அந்த அமைச்சு மறுத்தது.
அன்மையக் காலமாக கோவிட்-19 பரவல் தொடர்பாக பல்வேறு போலி தகவல்கள் பரப்பப்படுவதைத் தடுக்க தகவல் தொடர்பு பல்லூடக அமைச்சு (கேகேஎம்எம்) கடுமையான நடவடிக்கைகளை எடுத்து வருவதாக ஓர் அறிக்கையில் அது கூறியது.
சமூக ஊடகங்களில் போலியான தகவல்களைப் பரப்பும் தனிநபர்கள் அல்லது தரப்பினர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று அது எச்சரிக்கை விடுத்தது.


