ஷா ஆலம், ஏப்.13-
சிலாங்கூரில் கோவிட்-19 தொற்று மீதான இரண்டாம் கட்ட பரிசோதனை நடவடிக்கையை ‘செல்கேர்’ எனப்படும் சிலாங்கூர் கோவிட்-19 பரிசோதனை நடவடிக்கை மைய அதிகாரிகள் இவ்வாரம் மேற்கொள்வர் என்று அந்த மையத்தின் இயக்குநர் டத்தோ ஜாமானி அகமது மன்சோர் கூறினார்.
இந்த சோதனை நடவடிக்கைகள் சிவப்பு மண்டலப் பகுதிகளில் குறிப்பாக கிள்ளான் மற்றும் பெட்டாலிங் ஜெயா சுற்று வட்டார மக்களை உட்படுத்தும் என்றார் அவர்.
இந்நடவடிக்கையில் ஈடுபடுத்தப்பட்ட அதிகாரிகள் யாவரும் வீட்டிற்குச் செல்ல இன்று காலை அனுமதிக்கப்பட்டனர். இந்த நடவடிக்கைக்காகப் பயன்படுத்தப்பட்ட சாதனங்கள் யாவிலும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு அவை 24 முதல் 48 மணி நேரங்களுக்குப் பின்னர் மீண்டும் பயன்படுத்தப்படும் என்று சிலாங்கூர் கினியுடம் அவர் தெரிவித்தார்.
சுகாதார இலாகா, காவல் துறை மற்றும் உலு லங்காட் மாவட்ட அலுவலகத்தைச் சேர்ந்த மொத்தம் 649 பேர் செல்கேர் ஏற்பாட்டிலான இந்நடவடிக்கையில் ஈடுபட்டனர்.


