ஷா ஆலம். ஏப்.13-
சிலாங்கூரில் சிவப்பு மண்டலப் பட்டியலில் இடம்பெற்றுள்ள 6 மாவட்டங்களில் புதிதாக 48 சம்பவங்கள் பதிவாகியுள்ளன. அவற்றில் பெரும்பான்மையானவை பெட்டாலிங் மாவட்டத்தில் இடம்பெற்றுள்ளன.
உலு லங்காட் (392 சம்பவங்கள்), பெட்டாலிங் (359 சம்பவங்கள்), கிள்ளான் (166 சம்பவங்கள்), கோம்பாக் (131 சம்பவங்கள்), சிப்பாங் (61 சம்பவங்கள்) மற்றும் உலு சிலாங்கூரில் 45 புதிய சம்பவங்கள் பதிவாகியுள்ளன என்று நெருக்கடி தயார் மற்றும் உடனடி நடவடிக்கை மையம் (சிபிஆர்சி) தெரிவித்தது.
இதனிடையே, கோல சிலாங்கூரில் 30 சம்பவங்களும் கோல லங்காட்டில் 27 சம்பவங்களும் மற்றும் சபாக் பெர்ணமில் 21 சம்பவன்களும் பதிவாகியுள்ளன என்று அந்த மையம் கூறியது.
மொத்தத்தில் சிலாங்கூரில் புதிதாக 52 சம்பவங்கள் அல்லது 4.41 விழுக்காடு அதிகரித்து மொத்தம் 1,232 சம்பவங்கள் மற்றும் 10 மரணச் சம்பவங்களும் இதுவரை பதிவாகியுள்ளன.


