ஷா ஆலம், ஏப்.13-
நடமாட்ட கட்டுப்பாடு ஆணை நடைமுறைகளைப் பின்பற்றி அமைதியாக இருக்கும்படி ஷா ஆலம் மாநகரவாசிகளை ஷா ஆலம் மாநகராட்சி மன்றம் (எம்பிஎஸ்ஏ) கேட்டுக் கொண்டது. இங்குள்ள ஜாலான் புயூ 6/1D மற்றும் ஜாலான் தியுங் 6/1 ஆகிய சாலைகளில் அமைந்திருக்கும் 53 குடியிருப்புகளில் கோவிட்-19 பரவல் குறித்த வீடு வீடாக பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது என்று எம்பிஎஸ்ஏ அதன் முகநூலில் வெளியிட்ட அறிக்கைடில் தெரிவித்தது.
இந்த சோதனை நடவடிக்கையில் பெட்டாலிங் மாவட்ட மற்றும் நில அலுவலகம், பெட்டாலிங் மாவட்ட சுகாதார அலுவலகம் மற்றும் காவல் துறை ஆகியவை பங்கேற்றன.
இந்த சோதனை நடவடிக்கையின் போது ஒத்துழைப்பு நல்கிய அனைத்து தரப்பினருக்கும் நன்றி என்று அந்த அறிக்கை கூறியது.
நாடு கோவிட்-19 தொற்றில் இருந்து விடுபட்டிருப்பதை உறுதி செய்ய இந்த சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக அது தெரிவித்தது.
இச்சோதனை நடவடிக்கையின் போது எம்பிஎஸ்ஏ துணை மேயர் முகமது ரஷிடி ருஸ்லான், பெட்டாலிங் மாவட்ட அதிகாரி ஜோஹாரி அனுவார் மற்றும் பெட்டாலிங் மாவட்ட சுகாதார இலாகா அதிகாரியும் ஷா ஆலம் செக்சன் 6 பரிசோதனை நடவடிக்கைப் பிரிவுத் தலைவருமான டாக்டர் நஸிருல் அக்மால் ஆகியோரும் நேரடியாகப் பங்கேற்றனர்/


