ஷா ஆலம், ஏப்.13-
நடமாட்ட கட்டுப்பாடு 3ஆம் கட்டம் அமல்படுத்தப்படும் போது மாநிலத்தில் முடித்திருத்தகங்கள் செயல்படுவதற்கு அனுமதிப்பது குறித்து மாநில அரசாங்கம் இன்னும் முடிவெடுக்கவில்லை என்று ஊராட்சி துறை ஆட்சிக் குழு உறுப்பினர் இங் ஸீ ஹான் தெரிவித்தார். தேசிய பாதுகாப்பு மன்றத்துடன் (எம்கேஎன்) விவாதித்த பின்னரே இது குறித்து முடிவெடுக்க இயலும் என்றார் அவர்.
இவ்விவகாரம் குறித்து எம்கேஎன்னிடம் மாநில அரசாங்கம் விரைவில் விளக்கம் கோரும் என்று அவர் விவரித்தார்.
எனினும். இந்த நடமாட்ட கட்டுப்பாடு காலக் கட்டத்தில் முடித்திருத்தும் நிலையங்கள் செயல்பட அனுமதிப்பது அவசியம் இல்லை என்று தாம் கருதுவதாக அவர் சொன்னார்.
இந்த நிலையங்கள் இப்போது அனுமதிக்கப்படுவதற்கான சூழ்நிலை இல்லை என்றார் அவர்.


