ஷா ஆலம், ஏப்ரல் 12:
சிலாங்கூர் மாநில அரசாங்கம் கோவிட்-19 நோய் பரிசோதனையை சிவப்பு பகுதியில் வீடு வீடாக சென்று மூத்த குடிமக்களை குறி வைத்து நடவடிக்கையை முடுக்கியிருக்கிறது என சிலாங்கூர் மாநில மந்திரி பெசார் டத்தோ ஸ்ரீ அமிருடின் ஷாரி தெரிவித்தார். கடந்த இரண்டு நாட்களாக செல்கேர், சுகாதார இலாகா, காவல்துறை மற்றும் உலு லங்காட் மாவட்ட இலாகா ஆகியவையின் ஒருங்கிணைந்து செயல்பாடுகள் மூலம் 649 நபர்களுக்கு பரிசோதனைகள் செய்யப் பட்டதாக அவர் கூறினார்.
" மாநில அரசாங்கம் தங்களது அரிய பணியைத் சிவப்பு பகுதிகளாக அடையாளம் காணப்பட்டுள்ள இடங்களில் ஆபத்தான நிலையில் உள்ள மூத்த குடிமக்களை குறி வைத்து பரிசோதனையை செய்கிறது. நாம் கோவிட்-19 நோய் பரவலை ஒன்று சேர்ந்து எதிர்ப்போம்," என்று டிவிட்டரில் அமிருடின் ஷாரி பதிவு செய்துள்ளார்.


