ஷா ஆலம், ஏப்ரல் 12:
கோவிட்-19 வைரஸ் நோய் பரவி வருவதால் சிலாங்கூர் மாநில மக்கள் தங்களின் நடமாட்டத்தை குறைத்துக் கொண்டு, அத்தியாவசிய பொருட்களை வாங்கும் போது மட்டும் வெளியே செல்ல வேண்டும் என்று சிலாங்கூர் மாநில மந்திரி பெசார் டத்தோ ஸ்ரீ அமிருடின் ஷாரி வேண்டுகோள் விடுத்தார். பொது மக்கள் நான்கு நாட்களுக்கு போதுமான பொருட்களை ஒரே நேரத்தில் வாங்க வேண்டும் என்றும் அடிக்கடி வெளியேற வேண்டாம் என்று அறிவுறுத்தினார்.
" ஒவ்வொரு முறை அத்தியாவசிய பொருட்களை வாங்கும் போது மூன்று அல்லது நான்கு நாட்களுக்கு சேர்த்து வாங்கிக் கொள்ள வேண்டும். இதன் மூலம் நடமாட்டத்தை குறைத்துக் கொண்டு கோவிட்-19 வைரஸ் பரவலை தடுக்க முடியும்," என்று தமது டிவிட்டரில் அமிருடின் ஷாரி பதிவு செய்துள்ளார்.


