பாங்கி, ஏப்ரல் 12:
நேற்று தொடங்கி சிலாங்கூர் மாநில அரசாங்கத்தின் முயற்சியில் வீடு வீடாக கோவிட்-19 பரிசோதனைகளை மேற்கொண்டு வரும் வேளையில், இது மற்ற ஆபத்தான பகுதிகள் அல்லது சிவப்பு பகுதிகளாக அடையாளம் காணப்பட்டுள்ள இடங்களுக்கு விரிவுபடுத்த வேண்டும் என்று செல்கேட் கோப்ரேஷன் குழுமத்தில் தலைமை செயல் அதிகாரியாக நூர் ஹிஸாம் முகமட் கௌத் வேண்டுகோள் விடுத்தார். மலேசிய சுகாதார அமைச்சின் புள்ளி விவரங்களின் படி சிலாங்கூர் மாநிலத்தில் மேலும் 100 சிவப்பு புள்ளிகள் இருப்பதால் இது அவசியம் என்று அவர் தெரிவித்தார்.
இது மட்டுமின்றி, கோவிட்-19 வைரஸ் நோய் பரவி வருவதால் சிலாங்கூர் தவிர்த்து மலேசிய நாட்டின் சிவப்பு பகுதிகளாக அடையாளம் காணப்பட்டுள்ள மற்ற இடங்களிலும் இத்திட்டம் முடுக்கிவிட வேண்டும் என்று வலியுறுத்தினார்.
[caption id="attachment_399792" align="alignright" width="353"]
Ketua Pegawai Eksekutif Kumpulan Selgate Corporation, Noor Hisham Mohd Ghouth bercakap kepada media ketika operasi saringan Covid-19 besar-besaran di kawasan zon merah seluruh Selangor pada 12 April 2020. Foto HAFIZ OTHMAN/SELANGORKINI[/caption]
" சிலாங்கூர் மாநில அரசாங்கம் தொடங்கிய இந்த அரிய பணியை மாநிலத்தில் மட்டுமில்லாமல் நாடெங்கும் விரிவுபடுத்த வேண்டும் என்று பரிந்துரை செய்கிறேன். கோவிட்-19 வைரஸ் நோயை கட்டுப்படுத்த இதை செய்தே ஆக வேண்டும். இந்த வைரஸ் மக்களிடையே பரவுவதை நாம் தடுக்க வேண்டும். சிலருக்கு தமது உடலில் கோவிட்-19 வைரஸ் இருப்பது தெரியாமலே உள்ளனர்," என்று சிலாங்கூர் இன்றுக்கு தெரிவித்தார்.
[caption id="attachment_399801" align="alignleft" width="413"]
Pasukan petugas perubatan menjalankan saringan Covid-19 dari rumah ke rumah di Hulu Langat, pada 12 April 2020. Foto HAFIZ OTHMAN/SELANGORKINI[/caption]


