பாங்கி, ஏப்ரல் 12:
சிலாங்கூர் மாநில அரசாங்கத்தின் முயற்சியில் 500-க்கும் மேற்பட்ட உலு லங்காட் குடியிருப்பாளர்களை வீடு வீடாக சென்று கோவிட்-19 நோய் பரிசோதனை நடத்தியதாக செல்கேட் கோப்ரேஷன் குழுமத்தின் தலைமை செயல் அதிகாரி நூர் ஹிஸாம் முகமட் கௌத் தெரிவித்தார். தமது தலைமையில் 48 தன்னார்வ மருத்துவ பணியாளர்கள் இந்த அரிய பணியில் ஈடுபட்டுள்ளதாக அவர் மேலும் கூறினார். செல்கேட் கோப்ரேஷன் குழுமத்தில் துணை நிறுவனமான செல்கேர் கிளினிக்கை சேர்ந்த மருத்துவர்கள், தாதிகள் மற்றும் மருத்துவ உதவியாளர்கள் இதில் அடங்குவர் என்றார் அவர்.
இந்த பணியாளர்களை சிலாங்கூர் கோவிட்-19 மக்கள் பரிசோதனை நடவடிக்கை குழு என பெயரிடப்பட்டுள்ளது என்றும் சுங்கை ராமால் சட்ட மன்றம், காஜாங் சட்ட மன்றம் மற்றும் டூசுன் துவா சட்ட மன்றத் தொகுதிகளை நோக்கி தமது நடவடிக்கைகளை முடுக்கிவிட்டுள்ளது என அவர் விவரித்தார்.
[caption id="attachment_399773" align="alignright" width="410"]
Pasukan petugas perubatan menjalankan ujian saringan Covid-19 dari rumah ke rumah di Hulu Langat, pada 12 April 2020. Foto HAFIZ OTHMAN/SELANGORKINI[/caption]
"
" இந்த பகுதிகள் மலேசிய சுகாதார அமைச்சின் அறிக்கையின் படி சிவப்பு பகுதிகளாக அடையாளம் காணப்பட்டுள்ளது. இதனால் தான் நாம் இங்கு நமது நடவடிக்கை துரிதப்படுத்தி உள்ளோம்," என்று உலு லங்காட் மாவட்ட மற்றும் நில அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த போது இவ்வாறு நூர் ஹிஸாம் கூறினார்.
மேற்கண்ட நடவடிக்கையில் ஈடுபட்டவர்களை 13 குழுவாக பிரித்து காலை 8 மணி தொடங்கி மாலை 6 மணி வரை பணியில் அமர்த்தப்பட்டுள்ளதாகவும் இந்த பணி இரண்டு நாட்களாக நீடிக்கும் என்று அவர் விளக்கினார்.


