ஷா ஆலம், ஏப்ரல் 11:
இன்று நண்பகல் 12 மணி வரை சிலாங்கூர் மாநிலத்தில் கோவிட்-19 சம்பவங்கள் 35 புதிதாக பதிவு செய்யப்பட்டுள்ளதாக என்று சிலாங்கூர் கோவிட்-19 தடுப்பு பணிக்குழுவின் (எஸ்திஎப்சி) தகவல் கொடுத்துள்ளது. எஸ்திஎப்சியின் அதிகாரப்பூர்வ டிவிட்டரில் சிலாங்கூர் மாநிலத்தில் இது வரை 1,183 சம்பவங்கள் ஏற்பட்டுள்ளது என்று அதில் குறிப்பிட்டிருந்தது.
" அதிகமாக புதிய சம்பவங்கள் ஏற்பட்டாலும், கட்டுப்பாட்டுக்குள் உள்ளது. எப்படி இருப்பினும் அலட்சியத்துடன் இருக்க வேண்டாம். கோவிட்-19 நோயை முழுமையாக துடைத்தொழிக்கும் வரையில் அனைவரும் நடமாடும் கட்டுப்பாடு ஆணையை (பிகேபி) பின்பற்றி வீட்டில் இருக்கும் படி வேண்டுகிறோம்," என்று எஸ்திஎப்சி கூறியிருக்கிறது.


